Sale ஃபிக்ஹுஸ் ஸுன்னாஹ் பாகம் – 1 (இஸ்லாமிய சட்டக் கருவூலம்)

ஃபிக்ஹுஸ் ஸுன்னாஹ் பாகம் – 1 (இஸ்லாமிய சட்டக் கருவூலம்)

Be the first to review this product

Product Code: TAM53

Availability: In stock

Regular Price: $2.50

Special Price $1.75

Quick Overview

நூலாசிரியர்:

20ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகின் ஆன்மிகத் துறை, சட்டத் துறை ஆகியவற்றை மறுகட்டமைப்பு செய்த நாயகர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்தாம் அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக். இஸ்லாமியச் சட்டத்துறை வல்லுநர், தனித்துவம் மிக்க ஆசிரியர், மிகச் சிறந்த அழைப்பாளர், தலை சிறந்த எழுத்தாளர் என்று முத்திரை பதித்தவர்.இஸ்லாமியச் சட்டத்துறையின் தன்னிகரற்ற நூலான ‘ஃபிக்ஹுஸ் ஸுன்னாவை’ எழுதியவர் என்ற முறையில் பெரும் புகழ் பெற்றவர். ஹிஜ்ரி 1413-இல் (கி.பி.1994) முஸ்லிம் உலகின் மாபெரும் விருதான ‘ஃபைஸல் விருது’ பெறுவதற்குத் தகுதி பெற்றவராக இவரை மாற்றியதும் இந்நூல் தான்.குர்ஆனிலும், ஸுன்னாவிலும் ஆழ்ந்த ஞானமும், அத்துடன் சாதாரண மனிதர்களின் தேவைகளை மிக உன்னிப்பாகக் கவனித்தும் எழுதப்பட்ட ஒரு நூல்தான் ஃபிக்ஹுஸ் ஸுன்னா.அறிஞர்களால் மட்டுமே புரிந்துகொள்ளும் வண்ணம் இருந்த இஸ்லாமியச் சட்டக்கலையை எளிய மக்களும் புரிந்து-கொள்ளும் வண்ணம் மாற்றிய பெருமை இவரையே சாரும். குர்ஆன், ஸுன்னா, இஜ்மா ஆகியவற்றை ஆதாரங்களாய்க் கொண்டு சட்ட விளக்கங்களை விவரிக்க வேண்டும் என்பது மட்டுமே ஆசிரியரின் இலட்சியம்.அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் அவர்களின் ஏறக்குறைய 20 ஆண்டு உழைப்பே இந்நூல். உலகின் பல மொழிகளிலும் இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.இஸ்லாமியச் சட்டவிளக்கங்களைத் தெரிந்து அதன் வழி நடக்க வேண்டும் என்று உறுதிகொள்ளும் ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்திற்கும் இந்நூல் ஓர் அருட் கருவூலம்.

அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக்

தமிழில்: மௌலவி நூஹ் மஹ்ழரி

Details

‘இஸ்லாமியச் சட்டத் துறை என்றாலே அது மெத்தப்படித்த அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உரியது; எளியோருக்கும் இஸ்லாமியச் சட்டங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ எனும் ‘இரும்புச் சுவர்’ சூழல்தான் முஸ்லிம் சமூகத்தில் நிலவி வருகிறது. இதனால் ஏற்படும் விபரீதமான விளைவுகள் பற்றிச் சொல்லத் தொடங்கினால் ஏடு கொள்ளாது; எழுத்தாணி போதாது. பரபரப்பான ஒரு நகரிலுள்ள பெரிய பள்ளிவாசலில் தலைமை இமாமாகப் பல ஆண்டுகளாய்ப் பணியாற்றிவரும் மார்க்க அறிஞர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ‘இன்றைய இளைஞர்கள் - திருமணமான இளைஞர்கள் உட்பட- குளிப்பு எப்போது கடமையாகிறது போன்ற அடிப்படை மார்க்கச் சட்டங்-களைக்கூட அறியாமல் இருக்கிறார்கள்; ஒப்பீட்டு அளவில் பதின்பருவப் பெண்பிள்ளைகள் பரவாயில்லை; பாட்டி, அம்மா, மூத்த சகோதரி என யாரேனும் ஒருவர் வளரிளம் பெண்களுக்கு சில அடிப்படை சுகாதாரங்கள் குறித்தச் சட்டங்களைச் சொல்லித் தந்துவிடுகிறார்கள். பையன்கள் நிலைமைதான் பரிதாபம்’ என்று வருத்தப்பட்டார். இந்த வருத்தத்துக்குக் காரணம் அடிப்படை மார்க்கச் சட்டங்களை நாம் பரவலாக்காததுதான். பெற்றோர்களுக்கே பல விஷயங்கள் தெரியாது எனும்போது, பிள்ளைகள் பற்றி என்ன சொல்ல? எந்த ஒரு சிறிய பிரச்னைக்கும் ‘போய் ஹஜ்ரத்துகிட்ட கேளு’ என்பதுதான் பதில். அந்தரங்க சுகாதாரச் சட்டங்கள் பற்றியெல்லாம் ஹஜ்ரத்திடம் எப்படிக் கேட்பது என்று கூச்சப்பட்டுக் கொண்டு அது பற்றிய அறியாமையிலேயே காலம் கடத்துபவர்கள்தான் அதிகம். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணவேண்டுமானால் எளிய பாமர மக்களிடம் இஸ்லாமியச் சட்டங்கள் சென்று சேர வேண்டும். அவர்களுக்குப் புரிகின்ற வகையில் சொல்லப்படவேண்டும். முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் சிந்தனைப்பிரிவுகள் குறித்தோ, ஒவ்வொரு சிந்தனைப் பிரிவின் சட்டவாக்கங்கள் பற்றிய வாதப் பிரதிவாதங்களோ இல்லாமல், அந்த எளிய வாசகனைக் கைப்-பிடித்து நேரடியாகக் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் அழைத்துச் சென்று ‘இதுதான் சட்டம், இதுதான் வழிமுறை’ என்று காண்பிக்கின்ற வகையில் இஸ்லாமியச் சட்ட நூல்கள் வரவேண்டும். நமது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் வலைவீசித் தேடிப்பார்த்தும் அப்படி ஒரு நூல் இதுவரை தமிழில் இல்லை என்பது பெருங்குறையாகவே இருந்துவந்தது. அந்தக் குறையைப் போக்கும் வகையில் இதோ, இப்போது வெளிவந்துள்ளது ‘ஃபிக்ஹுஸ் ஸுன்னா’ எனும் அருமையான நூல். உலகப் புகழ்-பெற்ற இந்தச் சட்ட நூலின் முதல் தொகுதிதான் உங்கள் கைகளில் தவழ்கிறது. இதனுடைய இதர தொகுதிகள் அடுத்தடுத்து வெளிவரும் இன்ஷா அல்லாஹ். “எந்த மத்ஹபு குறித்தும் ஆதரவோ எதிர்ப்போ இல்லாமல், நபிவழியை அடிப்படையாகக் கொண்டு சட்ட விளக்கங்களைத் தருதல் எனும் மகத்தான சாதனையை ஃபிக்ஹுஸ் ஸுன்னா நூல் சாதித்துக் காட்டியிருக்கிறது” எனும் டாக்டர் யூசுபுல் கர்ளாவி அவர்களின் ஒரு வரி போதும், இந்த நூலின் சிறப்பைச் சொல்ல! இந்த பூமிப் பந்தில் தமிழ்பேசும் முஸ்லிம்கள் - குறிப்பாக இளைய தலைமுறையினர் - எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த நூல் சென்று சேர வேண்டும்; அவர்களின் அன்றாட வாழ்வுக்கு இது ஒரு குறிப்பு நூலாகப் பயன்படவேண்டும்; இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப வாழ்ந்து, உடல் நலனையும் ஆன்ம நலனையும் பெற்றுப் பெருவாழ்வு வாழவேண்டும் என்பது எங்கள் வேணவா.


Additional Information

Product size No
Select Size No

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.


Write Your Own Review

You're reviewing: ஃபிக்ஹுஸ் ஸுன்னாஹ் பாகம் – 1 (இஸ்லாமிய சட்டக் கருவூலம்)

How do you rate this product? *

  1 star 2 stars 3 stars 4 stars 5 stars
Quality
Price
Value